தரமில்லாத பொங்கல் பரிசு… குமுறும் பொதுமக்கள் : வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு திமுகவை தெறிக்கவிட்ட இபிஎஸ்!!!
Author: Babu Lakshmanan7 January 2022, 1:28 pm
சென்னை : தமிழக அரசினால் தரமில்லாத பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக, வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியுள்ளார்.
ஜன.,14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, பொங்கல் சிறப்பு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்போடு, பணப்பரிசையும் அதிமுக தலைமையிலான தமிழக அரசு வழங்கி வந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது. எனவே, இந்த ஆண்டும் பொங்கல் பணப்பரிசை எதிர்நோக்கி மக்கள் காத்திருந்தனர்.
இந்த சூழலில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே திமுக அரசு வழங்கி வருகிறது. இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் அறிவித்த 21 பொருட்களுக்கு பதிலாக, அதற்கும் குறைவான எண்ணிக்கையிலான பொருட்களே இருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக கண்காணிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், நாள்தோறும் ஏதேனும் புகார்கள் சமூக வலைதளங்களின் மூலமாக வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், மிழக அரசினால் தரமில்லாத பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக, வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை வெளிநடப்பு அதிமுக செய்த நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை எதிர்கட்சி தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது ;- பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ரொக்கப்பணம் இல்லாமல் வெறும் 21 பொருட்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், 21 பொருட்கள் கிடைக்கிறதா…? இல்லை. பெரும்பாலும் 15, 16 அல்லது 18 பொருட்கள்தான் கிடைக்கிறது. அதுவும் இல்லாமல், கொடுக்கின்ற பொருட்கள் தரமில்லாத பொருட்களாக இருக்கிறது, எனக் கூறி, பொங்கல் பரிசு தரமற்றதாக இருப்பது குறித்து பெண்கள் பேசும் வீடியோக்களை பத்திரிக்கையாளரின் சந்திப்பில் வெளிக்காட்டினார்.
ஏற்கனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பினால் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், தற்போது அதிமுகவினர் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டிருப்பது, திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
3
0