வேளாண்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று : ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி!!

10 August 2020, 5:45 pm
kamalkannan - updatenews360
Quick Share

கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமெடுத்துள்ளது. இதனால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அம்மாநில அரசு உள்ளது. அண்மையில் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்க நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பிறகு வீடு திரும்பினார்.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பரிசோதனை செய்யப்பட்டது.

கடந்த வாரம் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, தயார் ராஜம்மாள், மகன் விக்னேஷ் ஆகியோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், வீட்டு தனிமையில் இருந்து வந்த அமைச்சர் கந்தசாமி, அவரது மகன் விக்னேஷ் ஆகியோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.