அடுத்தடுத்த சர்ச்சையில் ‘பொன்னியின் செல்வன்’: சாமி சிலைகள் அருகில் காலணியுடன் வந்த நடிகை…கொந்தளித்த இந்து அமைப்புகள்..!!

Author: Aarthi Sivakumar
4 September 2021, 11:30 am
Quick Share

புதுடெல்லி: ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பின் போது நடிகை த்ரிஷா செருப்புடன் வந்ததால், இந்துக்களின் நம்பிக்கையை அவமதிப்பதாக இந்து அமைப்புகள் புகார் அளித்துள்ளனர்.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் சரித்திரநாவல் ‘பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகிறது. இரண்டு பாகங்களாக இதை இயக்குநரும் தயாரிப்பாளருமான மணிரத்னம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிட உள்ளார்.

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்': தொழில்நுட்பக் குழு விவரங்கள் வெளியாகின!  – பிரத்தியேக மேம்படுத்தல் – தமிழ் செய்திகள் – DravidaNews

இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. டாட்டியா மாவட்டத்தின் ஓர்ச்சா, குவாலியர் கோட்டைகளை அடுத்து இந்தோர் மாவட்டத்தின் ஹரிகேஷ்வரிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. நர்மதா நதிக் கரையிலுள்ள ராணி அகில்யா பாய் கோட்டை, அரண்மனை மற்றும் அவரால் அமைக்கப்பட்ட சிவன் கோயில்களிலும் கடந்த 5 நாட்களாக படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நடிகர் கார்த்தி மற்றும் ரகுமானுடன் நடிகை த்ரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஹரிகேஷ்வரின் நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. கடந்த 1767ம் ஆண்டில் ஆண்டராணி அகில்யா பாயால் அமைக்கப்பட்ட இவை இந்துக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நர்மதா நதிக்கரையில் த்ரிஷா படகில் வருவது போல காட்சிகள் படமாக்கப்பட்டது. படகில் இருந்து இறங்கி வரும் நடிகை த்ரிஷா அங்கிருக்கும், சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகளுக்கு இடையே நடந்து வருவது போல காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது, அவரது காலில் செருப்பு அணிந்திருந்ததால் இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்டதாகவும், இதனால் நடிகை த்ரிஷாவையும், இயக்குநர் மணிரத்னத்தையும் கைது செய்ய வேண்டம் என ஹரிஷ்கேஷ்வரின் இந்து அமைப்புகள் கொந்தளித்துள்ளன.

மேலும், இதுகுறித்து இதுதொடர்பாக ஹரிகேஷ்வர் காவல் நிலையத்தில் இந்து அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. படப்பிடிப்புன் போது, குதிரை உயிரிழந்ததாக சர்ச்சை கிளம்பிய நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் மீண்டும் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Views: - 385

1

0