பஞ்சமி நில விவகாரம்: மூல பத்திர நகலுக்கு ரூ.5 லட்சம் என அறிவிக்கப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…!!

15 November 2020, 4:20 pm
panchami land - updatenews360
Quick Share

பஞ்சமி நிலத்தை அபகரித்த முரசொலி, மூல பத்திர நகலை கண்டுபிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு என்ற அறிவிப்பு போஸ்டர் பல இடங்களில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சமி நிலத்தை அபகரித்த முரசொலி, மூல பத்திர நகல் கண்டுபிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு என போஸ்டர் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டது. ஆதித்தமிழர் மக்கள் கட்சி சார்பில் இந்த போஸ்டர் ஒட்ட பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் விவகாரம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போஸ்டர் அச்சடித்த ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் கூறியதாவது, பிரிட்டிஷ் ஆட்சியாளர் காலத்தில் விக்டோரியா மகாராணி மூலமாக சென்னையில் தாக்கப்பட்ட பட்டியலின மக்களுக்காக பஞ்சமி நிலம் தானமாக வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலத்தை திமுக தனது ஆட்சி காலத்தில் அதாவது 48 ஆண்டுகளுக்கு முன் மோசடியான உத்தரவு மூலமாக அபகரித்தது.


முரசொலி அறக்கட்டளையின் பெயரில் இந்நிலம் அபகரிக்கப்பட்ட தாக தெரிகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் புகார் மனு தரப்பட்டது. பஞ்சமி நிலம் தொடர்பான மூலப் பத்திரத்தின் நகல் கொடுப்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசு தருவதாக ஆதிதமிழர் மக்கள் கட்சி சார்பில் அறிவித்திருக்கின்றோம். விக்டோரியா மகாராணி கொடுத்த நிலம் பட்டியலின மக்களுக்கு சொந்தமானது என திமுகவினருக்கு தெளிவாக தெரியும்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி வருவதாக கூறும் திமுக நிர்வாகிகள் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலத்தை அபகரித்து மோசடி செய்து வருகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உண்மையானவராக, நேர்மையானவராக, நீதியை நிலைநாட்டு பவராக , பட்டியல் இன மக்களை பாதுகாக்கும் தலைவராக இருந்திருந்தால் முரசொலி அபகரித்த பஞ்சமி நிலத்தை ஒப் படைத்திருப்பார்.

ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. மாறாக பஞ்சமி நிலத்தை அபகரிக்க பல்வேறு திட்டங்களை ஆர். எஸ் பாரதி மூலமாக அரங்கேற்றி வருகிறார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பஞ்சமி நில விவகாரத்தில் தலையிட்டு அந்த நிலத்தை மீட்க உதவி செய்ய வேண்டும். திமுக அபகரித்த இந்த நிலம் பட்டியலின மக்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்க ஆதித்தமிழர் கட்சி பெரும் போராட்டத்தை நடத்த தயாராக இருக்கிறது. மக்களைத் திரட்டி திமுகவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். பட்டியல் இன மக்களை திமுகவிடம் இருந்து பாதுகாக்க ஆதித்தமிழர் மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்.

Views: - 12

0

0