இன்னும் எத்தனை நாட்கள்தான் அதிமுக ஆட்சியையே ஸ்டாலின் குறை சொல்லுவாரு..? பிரேமலதா விஜயகாந்த் காட்டம்..!!!

Author: Babu Lakshmanan
1 January 2022, 5:44 pm
Quick Share

சென்னை : ஆட்சிக்கு வந்த 8 மாதங்களுக்குப் பிறகும், முந்தைய ஆட்சியையே முதலமைச்சர் ஸ்டாலின் குறை சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவும் கட்சியின் தொண்டர்களை சந்தித்தனர். அப்போது, தொண்டர்களை பார்த்து விஜயகாந்த் கை அசைத்தார். மேலும், தன்னை சந்திக்க வந்த தொண்டர்களுக்கு ரூ.100 அன்பளிப்பாக வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- 2022ல் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுவிட்டோம். எதிர்கட்சியாக இருந்தபோது go back modi என்றவர்கள் மோடியுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது அரசியல். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால், மத்திய அரசின் தயவு திமுகவுக்கு தேவைப்படுகிறது.

தேமுதிகவின் செயல் தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து தொண்டர்களும், விஜயகாந்தும் முடிவு செய்வார்கள். 2026ல் தனி அணி அமைப்போம் என்பது பாமகவின் உட்கட்சி முடிவு. 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்து தேமுதிக அப்போது முடிவு செய்யும். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ரேடரை குறைசொல்லும் லெட்சனத்தில் அரசாங்கம் இருக்கிறது.

நீட் , நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை முறையாக நிறைவேற்றவில்லை என்ற மனக்குறை மக்களுக்கு இருக்கிறது. திமுக ஆட்சியிலும் நீட் மரணம் தொடரவே செய்கிறது, என தெரிவித்துள்ளார்.

Views: - 276

0

0