தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா: குடியரசுத் தலைவர் இன்று சென்னை வருகை..!!

Author: Aarthi
2 August 2021, 8:35 am
Ramnath Kovind - Updatenews360
Quick Share

சென்னை: தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படம் திறப்பு விழாவும் இன்று நடைபெறுகிறது.

சட்டசபை நூற்றாண்டு விழா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படம் திறப்பு விழா, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை மண்டபத்தில் இன்று மாலை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, இன்று பகல் 12:45 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறார்.

latest tamil news

அங்கிருந்து கிண்டியில் உள்ள ராஜ்பவன் சென்று தங்குகிறார். அங்கேயே மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு ச ட்டசபை மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். சபாநாயகர் அப்பாவு வரவேற்கிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தஉள்ளார். முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகின்றனர். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.பி.,க்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். விழா, ஒரு மணி நேரம் நடைபெற உள்ளது.

latest tamil news

விழா முடிந்ததும், மீண்டும் ராஜ்பவன் செல்லும் குடியரசுத் தலைவர் இரவு அங்கு தங்குகிறார். நாளை காலை, சென்னையில் இருந்து கோவை வழியாக ஊட்டிக்கு செல்கிறார். நுாற்றாண்டு விழாவை ஒட்டி, சட்டசபை மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

தலைமைச் செயலக நுழைவாயில் மற்றும் வெளியேறும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.வாழை மரங்கள், தென்னை ஓலை அலங்காரம், மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 174

0

0