திருப்பதி வந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் : ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்பு

24 November 2020, 2:24 pm
ramnath kovind tirupathi - - updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஆளுநர் வரவேற்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று விமானப்படை விமானத்தில் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு ஆந்திர மாநில ஆளுநர் பிஷ்வ பூஷன் ஹரிச்சந்திரன், முதல்வர் ஜெகன் மோகன் மற்றும் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்து கோவிலுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, வராக சுவாமி கோவிலிலும் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.

3.30 மணிக்கு திருமலையில் இருந்து புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானப்படை விமானத்தின் மூலம் அகமதாபாத் புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட எஸ்பி ரமேஷ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Views: - 0

0

0

1 thought on “திருப்பதி வந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் : ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்பு

Comments are closed.