பகலில் பாதிரியார்.. இரவில் போதை மாத்திரை சப்ளையர்.. கண்டுபிடித்த மனைவி கொலை : சென்னையை உலுக்கிய சம்பவம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள குணாபா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகளான வைஷாலி (33) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியாரான விமல்ராஜ் (35) என்பவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனர்.

இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இருவரும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்துள்ள பொன்மார் பகுதியில் உள்ள மலைத் தெருவில் குடியேறினர்.

விமல்ராஜ் பொன்மார் பகுதியில் அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

விமல்ராஜின் பெற்றோர் மேடவாக்கத்தை அடுத்துள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி மாலை ஒட்டியம் பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த விமல் ராஜ் தனது மனைவி வைஷாலி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவ மனைக்கு காரில் அழைத்துச் செல்லும்போது உயிரிழந்து விட்டதாகவும் அதனால் அவரது சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாகவும் கூறினார்.

இதை நம்பிய அவரது பெற்றோர் சடலத்தை வீட்டில் வைத்து வைஷாலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மும்பையில் இருந்து ஒட்டியம்பாக்கத்திற்கு வந்த வைசாலியின் பெற்றோர் மற்றும் சகோதரர் விஷால்குமார் ஆகியோர் வைஷாலியின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவசர போலீசுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இத்தகவல் உடனடியாக தாழம்பூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காரில் ஏற்றிய போது காயம் ஏற்பட்டதாகவும் வழியிலேயே அவர் இறந்து விட்டதால் சடலத்தை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டதாகவும் பாதிரியார் விமல்ராஜ் தெரிவித்தார்.

ஆனால் அவரது தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தனக்கும் தனது மனைவிக்கும் திருமணம் ஆனதிலிருந்து தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தகராறு முற்றியதில் அவரை அடித்து கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து நெரித்து கொலை செய்ததாகவும் கொலையை மறைத்து உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடியதாகவும் பாதிரியார் விமல்ராஜ் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அவரது ஒட்டியம்பாக்கம் வீட்டில் இருந்த வைஷாலியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே தனது மகள் கொலை வழக்கில் சந்தேகம் உள்ளதாகவும் அதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று வைஷாலியின் தாயார் மேரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணை யில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மனைவியை கொலை செய்த பாதிரியார் விமல்ராஜ் பொன்மார் பகுதியில் வசித்து வந்த ஜெபஷீலா (30) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததும் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர் களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்ததும் தெரிய வந்தது.

மேலும், தனது மாமியார் வீடு அமைந்துள்ள மும்பை பகுதியில் தங்கி இருந்தபோது அங்கிருந்த மெடிகல் ஷாப் ஒன்றில் இருந்து போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

கூரியர் சர்வீஸ் மூலம் மொத்தமாக மாத்திரைகளை வாங்கி வந்து உள்ளூர் நபர்களுடன் இணைந்து இத்தொழிலில் ஈடுபட்டு வந்தபோது வீட்டில் சுமார் 3000 மாத்திரைகளை இருப்பு வைத்துள்ளார். அப்போது பாதிரியாரின் மனைவி வைஷாலி இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வாங்கி வைத்திருப்பதாக பாதிரியார் விமல்ராஜ் கூறியதில் சந்தேகம் அடைந்த வைஷாலி தனது சகோதரர் மூலம் மும்பையில் விசாரித்துள்ளார். அப்போது அவை போதை மாத்திரைகள் என்றும் மனநிலை பாதிக்கப்பட்ட வர்களுக்காக மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிய வந்தது.

இதை போலீசில் சொல்லி விடுவேன் என்று வைஷாலி தனது கணவரிடம் கூறியதால் பயந்து போன பாதிரியார் விமல்ராஜ் இத்தகவலை தனது கள்ளக்காதலி ஜெபஷீலாவிடம் கூறி உள்ளார்.

இதையடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்து போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் (23), சந்திரசேகர் (19), அரவிந்த் (23), அஜய் (24), நங்கநல்லூரைச் சேர்ந்த மைக்கேல் (33), பொன்மார் மலைத்தெருவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்கிற சங்கர் (44), ஆகியோர் உதவியுடன் பாதிரியார் மனைவை வைஷாலியை கொலை செய்து நாடகம் ஆடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து தாழம்பூர் போலீசார் புதிய வழக்குப் பதிவு செய்து பாதிரியாரின் கள்ளக்காதலி பொன்மார் மலைத் தெருவைச் சேர்ந்த ஜெபஷீலா (30) மற்றும் மேற்கண்ட 6 பேர் உள்ள 7 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஜெபஷீலாவின் வீட்டிலும், பாதிரியாரின் வீட்டிலும் இருந்து 2800 போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர். இவர்களில் கைது செய்யப்பட்ட தினேஷ் மீது 6 வழக்குகளும், அரவிந்த் மீது 6 வழக்குகளும், அஜய் மீது 20 வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

27 minutes ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

48 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

1 hour ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

1 hour ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

2 hours ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

This website uses cookies.