வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரெயில் சேவை: கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி…!!

14 February 2021, 12:50 pm
vimko metro - updatenews360
Quick Share

சென்னை: ரூ.3770 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். ரூ.3,770 கோடி மதிப்பீட்டில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை 9.05 கீ.மீ.-க்கு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளது. வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையை பெண் ஓட்டுனர் ரீனா இயக்கினார்.

சென்னை கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4-வது அகல ரயில் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ. 293.40 கோடியில் கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4-வது அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் இடையே ஒற்றை வழி ரயில்பாதை பிரதமர் தொடங்கி வைத்தார்.

ரூ.423 கோடி மதிப்பில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையான விழுப்புரம்-மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையேயான ரயில் பாதையை நாட்டுக்கு அர்பணித்தார். ரூ.2,640 கோடியில் கல்லணை கால்வாய் புனரமைப்பது நவீனப்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.1000 கோடியில் சென்னை தையூரில் ஐஐடி சார்பில் அமைக்கப்படும் டிஸ்கவரி வளாகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Views: - 9

0

0