திருப்பூரில் அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய பெண்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பெருமைப்படுத்திய பிரதமர் மோடி..!!
Author: Rajesh30 ஜனவரி 2022, 5:50 மணி
புதுடெல்லி: அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய திருப்பூரை சேர்ந்த இளநீர் வியாபாரி தாயம்மாளுக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று வானொலி மூலம் 85வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஜன., 30ம் தேதியானது மகாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தாண்டு நேதாஜி பிறந்த நாள் அன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. மகாத்மா நினைவு நாள் வரை நீடிக்கும்.
தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசிக்கும் தாயம்மாள் என்ற பெண் செயல் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவருக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக, இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவரது குழந்தைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
அந்த பள்ளியின் உள்கட்டமைப்பை மேற்கொள்ள இளநீர் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக தாயம்மாள் அளித்தார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், மிகப்பெரிய சேவை செய்யும் மனதும் தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
0
0