இனி இதுபோன்று நிகழக் கூடாது… அரசு பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் : ஓபிஎஸ் – இபிஎஸ் வலியுறுத்தல்

Author: Babu
4 August 2021, 7:06 pm
EPS OPS - Updatenews360
Quick Share

சென்னை : தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை போன்று, இனி நிகழக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில்‌ பல்வேறு காட்சி ஊடகங்கள்‌, செய்திச்‌ சேனல்கள்‌ இயங்கி வருகின்றன. மதம்‌ சார்புடைய காட்சி ஊடகங்களும்‌, மக்கள்‌ மத்தியில்‌ ஆதரவைப்‌ பெற்றுள்ளன. அப்படிப்பட்ட ஊடகங்களில்‌ ஒன்றான “சத்யம்‌ தொலைக்காட்சி” நிலையத்தை தனிநபர்‌ ஒருவர்‌ நேற்று கையில்‌ ஆயுதங்களோடு தாக்கியதாக செய்திகள்‌ வந்துள்ளன. இச்செயலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வன்மையாகக்‌ கண்டிக்கின்றோம்‌.

இதுபோன்ற தாக்குதலைத்‌ தடுக்க தற்போதைய திமுக அரசு கடும்‌ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‌. இந்த தொலைக்காட்சி நிலையத்‌ தாக்குதலில்‌ ஈடுபட்ட நபரின்‌ பின்புலத்தை ஆராய்ந்து, இனியும்‌ இதுபோன்ற குற்றச்‌ செயல்கள்‌ நிகழா வண்ணம்‌ நடவடிக்கை
எடுக்கும்‌ பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைச்‌ சுட்டிக்காட்ட விரும்புகிறோம்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 284

0

0