கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : பேராசிரியர் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
18 December 2021, 1:45 pm
Quick Share

சென்னை : சென்னை அருகே கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜல்லடையான் பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையின் பேராசிரியராக பணியாற்ற வருபவர் ஆபிரகாம் அலெக்ஸ் (48). இவர் கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதாகவும், இது தொடர்பாக 3ம் ஆண்டு படிக்கும் மாணவிகள் இருவர், கடந்த 6ம் தேதி கல்லூரி துறை தலைவர் பத்மநாபனிடம் புகார் அளித்துள்ளனர்.

இது பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிகரணை போலீசார் கல்லூரி சென்ற போது, மாணவிகள் இருவரும் பேராசிரியர் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக புகாரளித்தனர். இதையடுத்து, போலீசார் கல்லூரி முதல்வர் ராம்நாதன் மற்றும் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்ட பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

இந்த நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் மீது வழக்குப்பதிவு. பேராசிரியர் மீது 354(I),(II) ஆகிய பிரிவுகளின் கீழ் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடுத்தடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொந்தரவு கொடுத்து வருவது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 336

0

0