‘சூரிதான் எனக்கு பணம் தர வேண்டும்’: தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

Author: Aarthi
10 October 2020, 5:00 pm
soori - updatenews360

Soori at Marudhu Press Meet

Quick Share

நிலத்தின் பெயரில் நடிகர் சூரி என்னிடம் வாங்கிய ரூ.1.12 கோடி பணத்தை அவர் தான் எனக்கு தர வேண்டும் என்று தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் “வீர தீர சூரன்” என்ற படத்தில் நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. எனினும் பேசப்பட்ட அடிப்படையில் சம்பளம் தராததால் அது குறித்து சூரி கேட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சம்பள பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் வாங்கித் தருவதாக படத்தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜனுடன் சேர்ந்து ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் கூறியதாக தெரிகிறது. அதன்படி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் நடிகர் சூரியிடம் பல்வேறு தவணைகளாக 3 கோடியே 10 லட்ச ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நிலத்தை வாங்கிய பிறகுதான் அதில் பல பிரச்னைகள் இருப்பது நடிகர் சூரிக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நடிகர் சூரி 2 பேரிடமும் கேட்டுள்ளார்.

இதனையடுத்து நடிகர் சூரி அளித்த புகாரின் பேரில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைபட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி இருப்பதால் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுள்ளது. இதை அடுத்து நடிகர் சூரிக்கு மத்திய குற்றபிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 29ம் தேதிக்குள் ஆஜராகி புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது, கஷ்டமாக இருப்பதாக கூறி நிலத்தின் பெயரில் நடிகர் சூரி என்னிடம் ரூ.1.12 கோடி பணம் வாங்கியுள்ளார். அவர்தான் எனக்கு பணம் தர வேண்டும் என்று தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Views: - 46

0

0