சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து கொண்டு, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சூரியனில் இருக்கும் காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்துள்ளது. பல்வேறு கிரகங்களை ஆய்வு செய்ய ஏராளமான செயற்கை கோள்களை அனுப்பியிருந்தாலும், சூரியனை ஆய்வு செய்த முதல்முறையாக அனுப்பப்படும் விண்கலம் இதுவாகும்.
இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆதித்யா எல்-1 -ஐ சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட்டில் இருந்து ஸ்டிராப் ஆன் திட்டமிட்டபடி பிரிந்தது. விண்ணில் ஏவிய 73வது நிமிடத்தில் புவி வட்ட பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு, குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது.
இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.
ஏற்கனவே, நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3-ஐ நிலைநிறுத்திய இந்தியா, தற்போது சூரியனை ஆய்வு செய்ய செயற்கை கோளை அனுப்பியிருப்பது இந்தியாவின் அடுத்த மைல்கல்லாகும்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.