இன்று விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்…!!

7 November 2020, 10:14 am
pslv 35 -updatenews360
Quick Share

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 3.02 மணிக்கு 1வது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.

மேலும், இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் உள்ளடங்கியுள்ளன.

PSLV48 success -updatenews360

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட், இந்தியாவின் 51வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.

தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. 26 மணி நேர கவுண்ட்டவுனை முடித்து கொண்டு இன்று மாலை 3.02 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

Views: - 25

0

0