காசியில் தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது பாராட்டுக்குரியது ; ஆனால், பாஜக குட்டிக்கரணம் போட்டாலும் அது மட்டும் நடக்காது… கார்த்தி சிதம்பரம் பேச்சு!!

Author: Babu Lakshmanan
21 November 2022, 4:20 pm
Quick Share

புதுக்கோட்டை ; அமைச்சர்களுக்குள் நடக்கும் மோதலை முதலமைச்சர் ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது :- காசியில் தமிழ் சங்கமம் நடத்துவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இதை வைத்து பாஜக வளர வேண்டும் நினைத்தால் அது நடக்காது.

கால்பந்து வீராங்கனை இறப்பு தொடர்பாக மருத்துவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர்கள் மீது காவல்துறை கிரிமினல் வழக்கு தொடர்வது ஏற்புடையது அல்ல. கிரிமினல் வழக்கு தொடர்ந்தால் எந்த மருத்துவரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயங்குவார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி என்பது நியமன பதவி தான். காங்கிரஸ் தலைவர் பதவி தன்னிடம் கொடுத்தால் சிறப்பாக செயல்படுவதற்கு தயாராக உள்ளேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவம் என்பது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. உட்கட்சி பிரச்சனையை அலுவலகத்திற்குள் பேசி தீர்த்து இருக்க வேண்டும்.

நிதி அமைச்சருக்கும், கூட்டுறவுத் துறை அமைச்சர், மின்சார துறை அமைச்சர் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளதை தமிழக முதல்வர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மார்க் விற்பனை அதிக அளவில் நடக்கும்போது, அந்த நிதி தன்னுடைய துறைக்கு வரவில்லை என்று நிதி அமைச்சர் கூறுவது வியக்கத்தக்கதாக உள்ளது, எனக் கூறினார்.

சமீப காலமாக பல இடங்களில் குண்டுவெடிப்பு நடந்து வருகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், உளவுத்துறை முன்கூட்டியே அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாத செயல் யார் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதிமுக விவகாரத்தில் இரட்டை தலைமை அந்த கட்சிக்கு ஒத்து வராது என்று பலமுறை நான் கூறியுள்ளேன். அது வழி தான் நடந்து வருகிறது. அதிமுகவில் நடப்பது வேடிக்கையாக உள்ளது.

அதிமுகவை வீழ்த்திவிட்டு பாஜக வளர வேண்டும் என்று நினைத்தால், அது தவறாக தான் முடியும். பாஜக தமிழகத்தில் வளர வேண்டும் என்று நினைத்தாலும், அது ஒரு எல்லை தான். எல்லையை தாண்டி அவர்களால் வர முடியாது. பாஜக எந்த யுக்தியை பயன்படுத்தினாலும் தமிழக மக்கள் மனதில் அவர்களால் இடம் பிடிக்க முடியாது, எனக் கூறினார்.

Views: - 273

0

0