எம்ஜிஆருக்கு பல பாடல்கள் ஹிட் கொடுத்த பாடலாசிரியர் உடல்நிலைக் கவலைக்கிடம்… மருத்துவமனை வெளியிட்ட பகீர் அறிக்கை..!!!

Author: Babu Lakshmanan
2 September 2021, 1:25 pm
pullamaipithan - updatenews360
Quick Share

சென்னை : திரைப்பட பாடலாசிரியர் புலமைப்பித்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திரையுலகில் அதிகம் பிரபலமடைய அவர் நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களும் முக்கிய காரணமாகும். குறிப்பாக, உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற பாடல் மிகவும் பிரபலமாகும்.

இந்தப் பாடலை எழுதியவர் பாடலாசிரியர் புலமைப்பித்தன். இவர் நான் யார், ஓடி ஓடி உழைக்கனும், ஆயிரம் நிலவே வா உள்ளிட்ட எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார். வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திலும் பாடல்களை எழுதியுள்ளார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பாடலாசிரியர் புலமைபித்தன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 31ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Views: - 341

0

0