தண்ட செலவு… அதெப்படி தேர்தல் வரும் போது மட்டும சந்திரயான் இறங்குது? சீமான் கொந்தளிப்பு!!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நிலவில் போய் ஆக்சிஜன் இருக்கிறதா என்று தேடுகிறார்கள்.. இங்கே இருக்கிறதா.. அங்கே போய் நீரை தேடுகிறீர்கள். இங்கே இருக்கும் நீர் என்ன ஆனது..
பூமியை தவிர எந்த கோள்களிலும் உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இல்லை. இந்த கோளில் மட்டும் தான் இருக்கிறது. சூரியனின் குழந்தைகள் தான் இவ்வளவு கோள்களும்.
அதில் பூமியில் மட்டும் தான் நீர் உள்ளது. இயற்கையின் விதியை பாருங்க… ஹைட்ரஜன் ஒரு விழுக்காடும் ஆக்சிஜன் 2 விழுக்காடும் இருந்தால் அது தண்ணீர் ஆகியிருக்காது. ஹைட்ரஜன் 2 விழுக்காடு ஆக்சிஜன் ஒரு விழுக்காடு என இருப்பதால் அது நீராகியுள்ளது. அந்த நீருக்குள்தான் உயிரினம் தோன்றியுள்ளது. அமீபாவில் இருந்து இவ்வளவு பெரிய உயிரினங்கள் வந்து இருக்கு.
சந்திரயான் ராக்கெட் பறக்கும் போது.. இங்கே சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்குகிறார்கள்.. என்ன உங்கள் விஞ்ஞானம்… எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்கிறீர்கள். உத்தர பிரதேச மாநிலத்தில் தரையில் நோயாளி படுத்து இருக்கிறான். அவருக்கு குளுகோஸ் வைக்க ஸ்டேண்ட் கூட இல்லை. கையில் ஒரு அம்மா பிடித்துக் கொண்டு நிற்பதை பார்த்தீர்களா இல்லையா… ஆம்புலன்ஸ் வசதி இல்லை.. யாருக்கு ஷோ காட்டுறீங்க..
இந்தியா போய் நிலவில் குடியேறிடுமா? அமெரிக்கா ரஷ்யா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமா? அவர்களுக்கு தெரியுது இது வெட்டி செலவு என்று… நீங்கள் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள்.
சரியாக தேர்தல் வரும் போது மட்டும் சந்திரயான் இறங்குதே எப்படி.. சந்திரயான் இறங்காவிட்டால் நீங்கள் மொத்தமாக இறங்கி விடுவீர்கள். 3 லட்சம் கி.மீட்டருக்கு அப்பால் உள்ள நிலவுக்கு சந்திரயானை அனுப்ப முடிகிறது.
ஆனால் 3 ஆயிரம் கி.மீட்டரில் இருக்கும் மணிப்பூருக்கு செல்ல முடியவில்லை. ஓகி புயலின் போது வர முடியவில்லை. குரங்கனியில் தீ பிடித்து எரியும் போது வர முடியவில்லை. சந்திர மண்டலத்திற்கு நீங்கள் சந்திரயானை விடுறீங்க…
நீங்கள் வேண்டும் என்றால் 10 வருடம் கழித்து பாருங்கள் என்ன நடந்தது என்று.. தெண்ட செலவு… என் வயிறு பசித்து கிடக்கும் போது வான்வெளியில் என்ன ஆராய்ச்சி… வெறுப்பு வருமா வராதா.. இவ்வாறு சீமான் பேசினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.