முதலமைச்சர் சன்னியின் உறவினர் வீடுகளில் திடீர் ரெய்டு : அதிர்ச்சியில் காங்கிரஸ்… தேர்தல் நேரத்தில் பஞ்சாப் அரசியலில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan18 January 2022, 11:38 am
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
110 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 20ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மார்ச் 10ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. காங்கிரஸில் ஏற்பட்ட கோஷ்டி பூசலால் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அம்ரீந்தர் சிங், அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகினார். அவரும் புதிய கட்சியைத் தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை சந்திக்கவிருக்கிறார். இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
மேலும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியின் தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் சந்திக்கிறது. அதோடு, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு கடும் போட்டியை உருவாக்கியுள்ளது. எனவே, ஆளும் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தல் அக்னி பரிட்சையாகத்தான் இருக்கும்.
இந்த நிலையில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருகின்றன. சட்டவிரோத மணல் குவாரி மற்றும் பணப்பரிமாற்றம் புகாரின் கீழ் இந்த சோதனை நடந்து வருவதாகவும், மொகலியில் உள்ள சன்னியின் மருமகன் பூபேந்தர் சிங் ஹனியின் வீடு உள்ள சுமார் 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் வருவது காங்கிரஸ் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0