நிவரை தொடர்ந்து வரும் புரெவி : நாளை முதல் தீவிரமடையும் மழை.. கவலையில் பொதுமக்கள்..!!

28 November 2020, 3:49 pm
cyclone india - updatenews360
Quick Share

சென்னை : நிவர் புயலை தொடர்ந்து புரெவி என்னும் புயல் தமிழகத்தை தாக்கப் போவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது வட தமிழக மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையை கடந்தது. ஆரம்பத்தில் அதி தீவிர புயலாக கரையைக் கடந்த புயல், பிறகு படிப்படியாக தீவிர புயலாகவே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஆனால், பெரிதாக எந்த பாதிப்போ, சேதமோ ஏற்படவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாலும், தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு, அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாலும், பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இருப்பினும், சில பகுதிகளில் மழை வெள்ள நீரால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. பின்னர், தமிழக கடற்கரையை நோக்கி நகரும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறினால் புரெவி என்ற வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புரெவி புயல் டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வரும் டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகம், புதுவையில் பரவலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்கவிருக்கிறது. வங்கக்கடலின் தென்கிழக்கு, மத்திய தெற்கு, அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அடுத்த 2 நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க : –

1 thought on “நிவரை தொடர்ந்து வரும் புரெவி : நாளை முதல் தீவிரமடையும் மழை.. கவலையில் பொதுமக்கள்..!!

Comments are closed.