வினாத்தாள் கசிந்த விவகாரம் : 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Author: kavin kumar
14 February 2022, 10:06 pm
School Education -Updatenews360
Quick Share

சென்னை : 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்ததைதையடுத்து, இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுகள் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில், 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், போளூர் ஆக்சிலியம், வந்தவாசி காசினி மெட்ரிக் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்வுத்துறை இயக்குனரின் வழிகாட்டுதலை பின்பற்றத்த அரசு அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே வெளியான அட்டவணையில் எவ்வித மாற்றமின்றி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 822

0

0