விஜய் சேதுபதியை மிரட்டுபவர்களால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கேள்வி கேட்க முடியுமா..? வெடித்துத் தள்ளிய ராதிகா சரத்குமார்..!!

By: Babu
16 October 2020, 5:15 pm
radhika sarathkumar - - updatenews360
Quick Share

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி முத்திரை பதித்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக எடுக்கும் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.

அண்மையில், சென்னை – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, ‘800’ படத்தின் மோஷன் பிட்சர் வெளியிடப்பட்டது. அது முதல் தற்போது வரை இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஈழத்தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவிக்கும் போது, அந்த அரசுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, தமிழர்களை கொன்று குவித்த அரசின் தேசிய கொடியை ஏந்தியவாறு, கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய நபரின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

vijay-sethupathi-muttiah-muralitharan - updatenews360

இயக்குநர் பாரதிராஜா, சீனு ராமசாமி, வைரமுத்து மற்றும் திராவிடக் கட்சி தலைவர்களான வீரமணி மற்றும் சீமான் உள்ளிட்டோரும் விஜய் சேதுபதி, 800 திரைப்படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு ஆதரவாக இதுவரையில் யாரும் கருத்து தெரிவிக்காத நிலையில், முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் பகிரங்க ஆதரவோடு டுவிட் போட்டுள்ளதோடு, எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகளை கேட்டு விளாசியுள்ளார்.

அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என கூறி வருபவர்களுக்கு வேறு வேலையே இல்லையா..? அரசியலில் ஆதிக்கம் நிறைந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் ஐபிஎல் அணியான ஐதராபாத் அணிக்கு, முரளிதரனை பயிற்சியாளராக நியமித்தீர்கள் என்று ஏன் இவர்கள் கேட்கவில்லை. விஜய் சேதுபதி ஒரு நடிகர். அவரை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது.

Radhika_VJS_ - updatenews360

சன் டிவி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர்கள் அரசியல் அதிகாரம் கொண்டவர்கள். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் அரசியல், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றை தெளிவாக கையாண்டு வருகின்றனர். அப்படி இருக்க, சினிமா துறையை மட்டும் பொழுதுபோக்காக பார்க்காமல், அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்.

தற்போதைய என்னுடைய பதிவு எந்தவிதமான சர்ச்சையையும் உருவாக்கும் நோக்கில் பதிவிடவில்லை. ஆனால், சினிமா துறைக்கு ஆதரவளிக்கும் நோக்கில் மட்டுமே கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறேன். அதன் காரணமாகவே, சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை அணியை சுட்டிக் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 65

0

0