வயநாடு பயணம் ரத்து செய்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி: திடீர் முடிவு ஏன்?தந்துள்ள வாக்குறுதி என்ன?

Author: Sudha
31 July 2024, 9:17 am

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பெருந்துயரில் ஆழ்ந்துள்ளனர்.

நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட நாளை வயநாடு செல்ல இருந்த ராகுல்காந்தி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பிரியங்கா காந்தியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் நாளை வயநாடு செல்வதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், விரைவில் வயநாடு வருகை தருவதாக ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில், எங்கள் எண்ணங்கள் வயநாடு மக்களுடன் உள்ளன எனவும் வயநாடு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் – எனவும் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Salman Khan Rashmika Mandanna Age Difference நீ யாரு..என்ன கேள்வி கேட்க..செய்தியாளர்களை கடிந்து கொண்ட சல்மான் கான்.!