அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: இன்று தனிவிமானத்தில் மதுரை வருகிறார் ராகுல்..!!

14 January 2021, 8:50 am
Quick Share

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைக் காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனி விமானம் மூலம் மதுரை வருகிறார்.

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த விழாவை காண காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு இன்று பகல் 11.30 மணிக்கு வருகிறார்.

பின்னர் காரில் அவனியாபுரம் செல்கிறார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் தமிழர்களின் வீர விளையாட்டை மேடையில் அமர்ந்து காண்கிறார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் மேற்பார்வையாளர் தினேஷ்குண்டுராவ், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

பிற்பகல் 2 மணிக்கு ராகுல்காந்தி மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 6

0

0