தமிழகமே கொண்டாடிய காமராஜரை மறந்த ராகுல் காந்தி : ஒரு டுவிட் கூட இல்லையேப்பா…!! விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!!

16 July 2021, 8:15 pm
kamarajar - rahul gandhi - updatenews360
Quick Share

சென்னை : காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளுக்கு காங்., எம்பி ராகுல் காந்தி வாழ்த்துக்கூட தெரிவிக்காதது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமாக இருந்த காமராஜரின் 119வது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசுப் பள்ளிகளில் அவர் கொண்டு வந்த இலவச மதிய உணவு திட்டத்தினால், அவரது புகழ் உலகம் முழுவதும் விரிவடைந்தது.

நேரு மறைவிற்கு காங்கிரஸ் சார்பில் அடுத்த பிரதமராக இந்திரா காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாகவும் காமராஜர் திகழ்ந்தார். அதோடு, தமிழகத்தை கடைசியாக ஆண்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் காமராஜர்தான். அதன் பிறகு, காங்கிரஸுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றுவரை பலர் காமராஜர் ஆட்சியை தருவோம் என தேர்தல் ஆணையம் வாக்குறுதிகள் தருவதை பார்க்க இயலும்.

காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது அரசியல் பேதமின்றி மற்ற கட்சியினரும் நேற்று காமராஜரின் நினைவுகளை போற்றி, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வந்தனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, ஒரு வாழ்த்து டுவிட் கூட போடாதது பெரும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் எதிர்கால பிரதமர் என ராகுல்காந்தியின் பெயரை கூவி வரும் நிலையில் காமராஜர் பிறந்தநாளன்று கூட ராகுல்காந்தி மறந்தது அரசியலில் ராகுல்காந்தியில் முதிர்ச்சியற்ற குழந்தைதன்மையை காட்டுகிறது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Views: - 201

0

0