நேருவின் 131வது பிறந்த நாள் : நினைவிடத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை..!!

14 November 2020, 10:05 am
rahul gandhi - updatenews360
Quick Share

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 131வது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவகர்லால் நேருவின் 131வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் அங்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நேருவின் நினைவிடத்திற்கு சென்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் நேருவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, நேருவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி விடுத்த டுவிட்டர் பதிவில், நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 45

0

0