விடாது துரத்தும் ராகுல்.. தயங்கி நிற்கும் P.K : காங்கிரஸ் திடீர் சடுகுடு!!

18 July 2021, 2:01 pm
Rahul PK- Updatenews360
Quick Share

காங்கிரஸ் தலைவரான ராகுல், கட்சியின் 3500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் காணொலி வாயிலாக பேசும்போது, திடீரென ஒரு எச்சரிக்கையை விடுத்தார். அது, அந்தக் கட்சிக்குள் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.

அப்படி என்னதான் ராகுல் பேசினார்? ஜோதிராதித்ய சிந்தியா போல, பாஜகவையும், எதார்த்தத்தையும் எதிர்கொள்ள பயப்படுபவர்கள் இப்போதே கட்சியை விட்டு வெளியேறி விடலாம். அதற்கு வசதியாக கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

PK 's New Strategy , Rahul Will Meet With Grassroots Workers - PK की नई  रणनीति, राहुल मिलेंगे जमीनी कार्यकर्ताओं से | Patrika News

நமது நாட்டில் எதற்கும் பயப்படாத, அஞ்சாத மக்கள் ஆயிரக்கணக்கானோர் உண்டு. ஆனால் அவர்கள் எல்லாம் காங்கிரசுக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நமக்காக எதையும் செய்ய தயாராக இருப்பவர்கள். அவர்கள் அனைவரையும் நாம் கட்சிக்குள் எப்படியாவது கொண்டு வரவேண்டும்.

அச்ச உணர்வு உள்ளவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். நமது கட்சியில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட பலர் உள்ளனர். அவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்படவேண்டும். பய உணர்வு கூடாது என்பதுதான் நமது சித்தாந்தம். இதுதான் உங்களுக்கு நான் சொல்ல வரும் செய்தி.

TMC, SP, BSP and TDP will not support the BJP: Rahul Gandhi

ராகுல் காந்தியின் இந்த பேச்சு மூலம் அவர் எதற்காக இப்படி கோபப்பட்டார்? என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர் தனது உரையில், ஜோதிராதித்ய சிந்தியா பற்றி ஆத்திரத்துடன் கூறுவதற்கு காரணம், மத்திய பிரதேச மாநிலத்தில் முன்னணி காங்கிரஸ் தலைவராக இருந்த அவர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் திடீரென பாஜகவுக்கு தாவினார். தன்னுடைய ஆதரவு 22 எம்எல்ஏக்களை பதவி விலக வைத்து அவர்களையும் பாஜகவில் சேர வைத்துவிட்டார்.

Jyotiraditya Scindia Old Friend, Ideology In His Pocket": Rahul Gandhi

இதனால் நூலிழை பெரும்பான்மையில் இருந்த காங்கிரஸ் அரசு கவிழ்ந்து. அங்கு பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. ஏற்கனவே காலியாக இருந்த 6 தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் 28 இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

இதேபோன்ற கூத்துதான் 2 வருடங்களுக்கு முன்பு கர்நாடகத்திலும் நடந்தது. காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த மாநிலங்களில் 2 பெரிய மாநிலங்களை அடுத்தடுத்து பாஜக கபளீகரம் செய்துவிட்டதால்தான் ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்ட நிர்வாகிகள் காங்கிரஸில் இன்னும் இருக்கிறார்கள் என்று ராகுல் நம்புகிறார்.

Rahul Gandhi Lost His Arms In Jyotiraditya Scindia, Sachin Pilot: BJP  Leader Nitin Patel

ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் விரிவுபடுத்தப்பட்ட மோடியின் மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து அமைச்சராகி விட்டார். இதேபோல் உத்தரபிரதேச மாநில காங்கிரசில் இளம் தலைவராக திகழ்ந்த ஜிதின் பிரசாதா அண்மையில் பாஜகவுக்கு தாவினார். இப்படி பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இளம் தலைவர்கள் மூட்டையை கட்டிக் கொண்டு வெளியேறிவிட்டனர். அதுதான் ராகுலின் இந்த திடீர் பாய்ச்சலுக்கு காரணம்.

அவர், இப்படி ஆவேசமாக தாக்கி பேசியிருப்பது இளம் தலைவர்களை மட்டுமல்ல. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில் கட்சிக்கு வலிமைமிக்க முழுநேர தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த தலைவர் அனைவரையும் கலந்து பேசி முடிவெடுப்பவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர். அந்தத் தலைவர்களுக்கும் சேர்த்தே ராகுல் தனது காணொலி பேச்சில் மறைமுக கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

Rahul Gandhi meets Nitish's poll strategist Prashant Kishor | India  News,The Indian Express

மேலும் வெளியே உள்ள காங்கிரஸ் ஆதரவு தைரியசாலிகளை கட்சிக்குள் கொண்டு வரவேண்டுமென்று ராகுல் கூறுவது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை மனதில் வைத்து விடுத்த அழைப்பாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் டெல்லி, ஆந்திரா, மேற்கு வங்காளம், தமிழகம் என்று அவர் தேர்தல் வியூகம் வகுத்த மாநில கட்சிகள் அனைத்துமே பாஜக எதிர்ப்பு நிலையை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Congress' Uttar Pradesh plan leaves out Prashant Kishor - The Economic Times

இதனால்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரசில் இணைந்து, செயல்படும்படி பிரசாந்த் கிஷோருக்கு, ராகுல் மறைமுக அழைப்பு விடுத்திருக்கிறார், என்றே கருதத் தோன்றுகிறது.

அண்மையில் பிரசாந்த் கிஷோர், பஞ்சாப் மாநில தேர்தல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் ராகுலை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் காணப்பட்ட பாஜக எதிர்ப்பு, மோடி மீதான கோபம் ராகுலுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். அதனால்தான் அடுத்த ஆண்டு பஞ்சாப்புடன் சேர்ந்து தேர்தல் நடைபெறும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றுக்கும் வியூகம் வகுத்துக் கொடுக்க அவரையே ராகுல் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதைவிட பிரசாந்த் கிஷோர், இப்போதே காங்கிரஸில் இணைந்து விட்டால் தனக்கு
பாதி சுமை குறைந்து விடும் என்று ராகுல் கருதுகிறார். ஆனால் பிரசாந்த் கிஷோரோ தயக்கம் காட்டி வருகிறார். ராகுல் அவரை விடுவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து அழைப்பு விடுத்தவண்ணம் உள்ளார்.

Rahul Gandhi And Prashant Kishor Policy Failed In Ghaziabad Assembly, Up  Polls News Hindi - खड़े होने से पहले ही इस शहर में बिखरी कांग्रेस, राहुल और  पीके भी हुए फेल |

இதுதொடர்பாக டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறும் போது, “வளரும் இளம் தலைவர்களுக்கு காங்கிரஸ் மதிப்பும், மரியாதையும் கொடுப்பதே கிடையாது என்ற பேச்சு பரவலாகவே உள்ளது. மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை முன்னிறுத்தியும், ராஜஸ்தானில் சச்சின் பைலட்டையும் முன்னிறுத்தியும்தான் சட்டபேரவை தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வென்றதும் மூத்த தலைவரான கமல்நாத் முதலமைச்சர் பதவியை சாதுரியமாக பெற்றார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின் சச்சின் பைலட் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் மூத்த தலைவரான அசோக் கெலாட் அந்த வாய்ப்பை தட்டிப் பறித்துக் கொண்டார்.

2016 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நமச்சிவாயம் முன்னிறுத்தப்பட்டார். ஆனால் காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றி பெற்றதும் தேர்தலிலேயே போட்டியிடாத நாராயணசாமி முதலமைச்சர் ஆகிவிட்டார். அதனால்தான் நமச்சிவாயம் காங்கிரசிலிருந்து வெளியேறி பாஜகவுக்கு சென்றார். தற்போது என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சிக்கும் வழி வகுத்து விட்டார்.

Setback to Congress in Puducherry as PWD Minister Namassivayam, MLA resign,  set to join BJP- The New Indian Express

கேரளாவில் செல்வாக்குடன் திகழும் ரமேஷ் சென்னிதாலாவை முன்னேற விடாமல் இன்றுவரை முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

தமிழகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனது மகனின் அரசியல் வளர்ச்சி பற்றியே எப்போதும் சிந்திக்கிறார். அவருடைய மாவட்டத்தில் சுதர்சன நாச்சியப்பன் என்றொரு தலைவர் வளர்ந்து கொண்டிருந்தார். மகனுக்காக அவரை முன்னேற விடாமல் தடுத்ததும் ப.சிதம்பரம்தான்.

Now, P Chidambaram's Truth Bombs for Congress, Bypoll Results Show

இப்படி பல மாநிலங்களில், மூத்த தலைவர்கள் கட்சியில் வளர்ந்து கொண்டிருக்கும் தலைவர்களுக்கு வழியே விடுவதில்லை. இதை துணிந்து கேட்க வேண்டிய காங்கிரஸ் தலைமையோ ஒவ்வொரு முறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு உறுதியான முடிவையும் எடுப்பதில்லை. இதனால் எதிர்காலத்தில் தங்களுக்கு காங்கிரசில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்பதை உணர்ந்து இளம் தலைவர்கள் வெளியேறி வேறு கட்சிகளுக்கு செல்கின்றனர்.

1967-க்கு பிறகு காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறுவது தொடர்ந்து நடந்து வருகிறது. காங்கிரஸ் என்ற பெயரில் மட்டுமே சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் பிறந்து விட்டன.

Allies miffed, trouble brews in Maharashtra for Congress - News Analysis  News

3-வது அணிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிரதான கட்சிகள் காங்கிரசை ஒரு பொருட்டாக மதிப்பதே கிடையாது. அந்த மாநிலங்களில் காங்கிரஸார் தைரியமாக தனித்து போட்டியிடவும் முடியாது. யாராவது நம்மை தூக்கிச் சுமக்க மாட்டார்களா? என்று நினைத்தால்
பிறகு எப்படி காங்கிரஸ் வளரும்? இந்த உண்மைகளை காங்கிரஸ் தலைமை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அரசியல் விமர்சகர்களின் இந்தக் கருத்திலும் உண்மை இருக்கவே செய்கிறது!

Views: - 153

0

0