முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு: 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!!

Author: Aarthi Sivakumar
18 October 2021, 8:54 am
Quick Share

புதுகோட்டை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு, குவாரி மற்றும் அவரது அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

2013 முதல் 2021 வரை தமிழக அமைச்சரவையில் இருந்த சி.விஜயபாஸ்கர் குவாரி மற்றும் அறக்கட்டளை துவக்கி பல கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி, புதுக்கோட்டை 6 மாவட்டங்களில் 43 இடங்களில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

திருவேங்கைவாசல் குவாரியிலும், சகோதரர் உதயக்குமார் , மனைவி ரம்யா, தந்தை , உதவியாளர் குருபாபு ஆகியோர் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது. கோவையில் ராமநாதபுரத்தில் உள்ள மனைவியின் தந்தை வீட்டிலும் ரெய்டு நடக்கிறது.

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கேசி வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 594

0

0