ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை : ரயில்வே நிர்வாகம்..!!

10 November 2020, 6:34 pm
Indian_Railway_Local_Train_UpdateNews360
Quick Share

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை பொதுமக்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு வசதியாக, அவர்கள் பயணிக்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தீபாவளியையொட்டி பட்டாசுகளை பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் வாங்குகின்றனர். அதனை சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். ஏற்கனவே, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்வ தடை விதிக்கப்பட்டுள்ளதை தற்போது ரயில்வே நிர்வாகம் சுட்டிக் காட்டியுள்ளது.

தடையை மீறி எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து சென்னை ரயில்நிலையங்களில் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் மூலம் ரயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Views: - 28

0

0

1 thought on “ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை : ரயில்வே நிர்வாகம்..!!

Comments are closed.