கொரோனா ஒழிப்பில் கை கொடுக்கும் ரயில்வே..! எப்படி என்று தெரியுமா..?

26 March 2020, 3:24 pm
Indian Railways_UpdateNews360
Quick Share

டெல்லி: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ரயில் பெட்டிகளை, மருத்துவமனை வார்டுகளாக மாற்ற ரயில்வே துறை முன்வந்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது இந்த கொரோனா வைரஸ்.

கிட்டத்தட்ட பலியானோர் எண்ணிக்கை உலகளவில் 21 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 14ஐ தொட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கான வார்டுகள் அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

அதாவது 1000 பேருக்கு 3 தனிமையான படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி இருக்கும் விஷயமாகும். இதனையடுத்து படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது.

இந்த சிக்கலை தீர்க்க கைகொடுக்கிறது இந்திய ரயில்வே துறை. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம், அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், காலியாக இருக்கும் ரயில் பெட்டிகளை, கொரோனா அவசர  வார்டுகளாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply