மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு : பியூஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பு..!

Author: Babu
9 October 2020, 5:25 pm
piyush ghoyal - updatenews360-
Quick Share

டெல்லி : உடல்நலக் குறைவால் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானதை தொடர்ந்து, அவர் வகித்து வந்த துறை, அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பிறகு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்தும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமலே இருந்து வந்தது. இந்த சூழலில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவால் அவர் வகித்து வந்த மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை காலியானது. இதையடுத்து, அந்தத் துறையை தற்காலிகமாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 48

0

0