‘உனக்கு வெட்கமா இல்லையா தயா’..! இந்தி எதிர்ப்பு விவகாரத்தில் மூக்குடைந்து போன திமுக..!

7 October 2020, 5:50 pm
dayanidhi - tr baalu - updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக இந்தி எதிர்ப்பு விவகாரம்தான் பூதாகரமாகியுள்ளது. புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கையை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. தமிழகத்தின் எதிர்ப்புகளை தொடர்ந்து, மும்மொழிக் கல்விக் கொள்கையில் 3வது மொழியாக இந்தியை தேர்வு செய்வது கட்டாயம் என எந்த குறிப்புகளும் சொல்லவில்லை, ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என மத்திய அரசும் விளக்கமளித்துள்ளது.

இதனிடையே, விமான நிலையத்தில் பாதுகாவலர் ஒருவர், ‘இந்தி தெரியாததால் தன்னை இந்தியனா..?’ எனக் கேட்டதாகக் திமுக எம்பி கனிமொழி கூறினார். இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தினர். மேலும், தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மற்றுமொரு துறையில் இந்தி திணிக்கப்பட்டதாக திமுக எம்பிக்கள் கூறி மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர். அண்மையில், ரயில்வே டிக்கெட்டுக்களை பதிவு செய்பவர்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டி, அதன் ஸ்கிரீன்ஷாட்களையும் பதிவிட்டிருந்தார்.

இவரைத் தொடர்ந்து, மற்றொரு திமுக எம்பியான தயாநிதி மாறனும், ரயில்வே டிக்கெட்டுக்களை பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருகிறது எனக் கூறி தெற்கு ரயில்வேவை காரசாரமாக திட்டி டுவிட் போட்டிருந்தார். அவர் விடுத்த பதிவில், “ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் மனிதனையே கடிப்பது போன்ற நிகழ்வுதான் இது. எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ற கண்மூடித்தனத்தால், தமிழகத்தில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும் இந்தியில் குறுஞ்செய்தி அனுப்புகிறது ரயில்வே துறை. இதை உடனடியாக நிறுத்துங்கள்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

எம்பி தயாநிதி மாறனின் இந்தக் குற்றச்சாட்டிற்கு தெற்கு ரயில்வே சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், செல்வமணி என்பவரது பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்தவர், இந்தி மொழியை தேர்வு செய்துதான் டிக்கெட் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, குறுஞ்செய்தி இந்தியில் அனுப்பப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளது.

ரயில்வே துறையின் இணையபக்கத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஏதுவாக, மொழி என்னும் வசதி இடம்பெற்றிருக்கும். அதனை க்ளிக் செய்து, ஆங்கிலம் அல்லது இந்தியில், எது விருப்ப மொழியோ, அதனை தேர்வு செய்து கொள்ளலாம். அப்படி தேர்வு செய்யும் மொழியில்தான் ரயில்வே சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்பது வழக்கமான ஒன்று.

அப்படியிருக்கையில், “இந்த அடிப்படை விபரத்தை கூட தெரிந்து கொள்ளாத திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு, முதலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வழிமுறையை கற்றுக் கொடுங்கள். தேர்தலில் அப்புறம் போட்டியிடலாம்” என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லியதை போன்றே, தமிழகத்தை போராட்டக்களமாகவே வைக்க வேண்டும் என்பதற்காகவே திமுகவினர் இதுபோன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் நெட்டிசன்கள் கடுமையான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.

மேலும், இந்தி விவகாரத்தில் திமுக செய்து வரும் அரசியலை நெட்டிசன்கள் கலாய்த்தும், விமர்சித்து விடுத்துள்ள டுவிட்டர் பதிவுகள் சில,

Views: - 21

0

0