ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் மரணம்:ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்

23 September 2020, 11:09 pm
Quick Share

டெல்லி: கொரோனா தொற்றுக்கு ஆளாகி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவை வாட்டி எடுக்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு. இதையடுத்து நோய்த் தொற்றுவது கட்டுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எண்ணிக்கை குறைந்த பாடில்லை. மாறாக நாள்தோறும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. தொடக்கத்தில் இந்தியாவில் நோய்த் தொற்று குறைவாகவே இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்த நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கடந்த 11ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 4-வது பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி ஆவார். இவரது மரணம் மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுரேஷ் அங்காடி மறைவிற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Views: - 9

0

0