நாடு முழுவதும் மேலும் 100 சிறப்பு ரயில்கள் இயக்கம் : ரயில்வே அமைச்சகம் முடிவு..!

1 September 2020, 6:37 pm
Train_Updatenews360
Quick Share

டெல்லி : நாடு முழுவதும் மேலும் 100 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது போக்குவரத்திற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் மத்திய அரசு, படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 29ம் தேதி வெளியிடப்பட்ட 4வது கட்ட தளர்வில், பொதுப் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. மேலும் மெட்ரோ ரயில்களை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஊரடங்கு காலத்தில் டெல்லியில் இருந்து சென்னை உள்பட முக்கிய 15 நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், நாடு முழுவதும் மேலும் 100 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களுக்குள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் இயக்கப்படும் இந்த ரயில்கள், சிறப்பு ரயில்கள் என்னும் பெயரின் கீழ் இயக்கப்பட இருப்பதாகவும், தற்போது, 230 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், அதில் 30 ராஜதான வகை ரயில்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில்களின் நேரம் மாற்றப்படாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Views: - 0

0

0