வெற்றியை உறுதி செய்யும் மழை ராசி : அதிமுக நம்பிக்கை!!

21 January 2021, 10:01 pm
Admk- Updatenews360
Quick Share

நமது நாட்டில் மாநில சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை பல்வேறு காரணிகள் அதன் முடிவுகளை தீர்மானிக்கின்றன.

குறிப்பாக தொழில் முதலீடு, மின்சாரம் மற்றும் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு, தட்டுப்பாடற்ற தண்ணீர், சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பின்மை குறைவு, கிராம, நகர்ப்புற வளர்ச்சி, சாலை வசதி, கல்வி மேம்பாடு,பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு என்று ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. இந்த துறைகள் எல்லாமே வெவ்வேறானவை என்பது நமக்குத் தெரிந்த விஷயமே!

துணைமின் நிலையங்களில் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பு: விரைவில் பணிகள் தொடங்க  மின்வாரியம் திட்டம் | துணைமின் நிலையங்களில் சூரியஒளி ...

ஆனால் இவற்றில் உணவு தானிய உற்பத்தி, குடிநீர்,மின்சாரம் ஆகிய மூன்றும் ஒரே அம்சத்தில் அடங்கி விடுகின்றன.
அதாவது இவை மூன்றும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன. குறிப்பாக மழை என்னும் ஒற்றைச் சொல்லில் அடங்கி விடுகின்றன.

இப்படி எல்லா காலங்களிலும் ஆளும் அரசுகளுக்கு மழை சாதகமாக அமைந்து விடுவதில்லை. குறிப்பாக ஜனநாயக நாடுகளில் அதிக மழை பெய்தாலும் சரி, மழை பெய்யா விட்டாலும் சரி அது ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாகவே மாறிவிடும். குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு அது அல்வா சாப்பிடுவது போன்று ஆகிவிடும்.

Heavy rains in Odisha, to persist till Sunday- The New Indian Express

சரி எதற்கு இத்தனை பீடிகை?… காரணம் இருக்கிறது. அதற்கு முன்பு தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையின் அளவை ஓரளவு நாம் தெரிந்து கொள்வது அவசியம். தமிழகத்தில் மழை காலத்தை மூன்று விதமாக பிரிக்கலாம். பிப்ரவரி முதல் மே மாதம் முடிய பெய்யும் மழைக்காலம் மெல்லிய ரகம்.

இந்த நான்கு மாதத்தில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சராசரி மழையின் அளவு 9 சென்டி மீட்டர்கள். 2020-ம் ஆண்டின் இக்காலகட்டத்தில்10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
இரண்டாவது பருவ மழை காலம் ஜூன் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். தென்மேற்கு பருவமழை காலமான இந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கு 39 சென்டி மீட்டர் மழை கிடைக்க வேண்டும். 2020-ல் இதைவிட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதாவது 42.4 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

Heavy rain likely to lash Odisha's six districts

இதையடுத்து வடகிழக்கு பருவமழை காலம் தான் நமக்கு அதிகமான மழை பொழிவை தரும். அப்போது 43.4 செ.மீ. மழை கிடைக்க வேண்டும்.

அக்டோபர் முதல் வாரம் தொடங்கி இந்த மழைக்காலம் டிசம்பர் வரை நீடிக்கும். சிலநேரம் ஜனவரி மாதத்தின் முதல் வாரம் வரை இதன் நீட்சி இருக்கும். இந்த காலகட்டத்தை கணக்கில் கொண்டால் இந்த ஆண்டில் கடந்த 16-ந் தேதி வரை 60 சென்டி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் ஒரு சில தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியுள்ளது.
நமக்கு ஒரு ஆண்டிற்கு கிடைக்கவேண்டிய மொத்த மழை அளவு 91.3 சென்டி மீட்டர்கள் ஆகும். ஆனால் கடந்த ஓராண்டில்112 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரி,குளங்கள், ஊரணிகள் நிரம்பிக் கிடக்கின்றன. அணைகள் அனைத்திலும் தண்ணீர் ததும்பி நிற்கிறது. இதைவிட மகிழ்ச்சியான செய்தி ஏதும் ஆளும் அரசுக்கு இருக்க முடியாது. ஏரி, குளங்களில் நீர் நிரம்பி இருந்தால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் எளிதாகக் கிடைக்கும். குடிநீர் தட்டுப்பாடு என்பதே இருக்காது. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் விவசாயமும் அமோகமாக நடக்கும். அது மட்டுமல்ல. நீர் மின் உற்பத்தியும் அதிகமாக இருக்கும்.

North India Set for Fresh Rain Spell and Thunderstorms; Seven States, UTs  on Orange Alert Come Thursday | The Weather Channel - Articles from The  Weather Channel | weather.com

தமிழகத்தில் எப்போதுமே கோடைகாலத்தில், அதாவது ஏப்ரல்,மே மாதங்களில் வெயில் வறுத்தெடுக்கும். எப்படியும் குடிநீர் தட்டுப்பாடு வந்துவிடும். சுட்டெரிக்கும் வெயிலால் நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகி வேகமாக குறைய தொடங்கும். அதுவும் வறட்சி நிலவும் மாவட்டங்களில் நிலைமையை சொல்ல வேண்டியதே இல்லை. மக்கள் குடிநீருக்காக, குடங்களை தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் ஓடும் அவல காட்சிகளையே காண முடியும்.

Rain in Delhi: More rain, thunderstorm likely today in Delhi | Delhi News -  Times of India

நகர்ப்புறங்களில் தெருக் குழாய்களில் எந்த நேரமும் காற்றுதான் வரும். இதனால் மக்கள் எப்போது தண்ணீர் லாரி வருமென்று குடங்களை தெருக்களில் வரிசையாக அடுக்கி வைத்து காத்திருப்பார்கள். லாரி வரும்போது தள்ளு முள்ளு, வாய்த்தகராறு நடப்பது அன்றாட காட்சிகளாக இருக்கும். சில நேரம் இது கைகலப்பிலும் கூட முடியும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி விட்டதால் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இடமே இருக்காது.

Chief Minister Edappadi K. Palaniswami Sows With Farmers - किसानों के साथ  खेत में उतरे 'धरती पुत्र' मुख्यमंत्री | Patrika News

இல்லையென்றால் இதைவைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுக்கு எதிராக சட்டபேரவை தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை இழுக்க முயற்சிக்கும். இது ஆளுங்கட்சிக்கு ஒரு மைனஸ் பாயிண்ட்டாகவும் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இப்பிரச்சினை எழ வாய்ப்பு இல்லை.

Jayalalithaa to take oath as Tamil Nadu Chief Minister today | India TV  News | National News – India TV

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறிவிட்டது. அதற்காக அவர் எடுத்த நடவடிக்கைகள் ஏராளம். இதை தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் திறமையாக கையாண்டு மாநிலத்தில் மின்தடை இல்லாத சூழலை உருவாக்கிவிட்டது. இதனால் வரும் கோடையில் மக்கள் தட்டுப்பாடின்றி மின் விநியோகத்தை பெறமுடியும். இதுவும் அதிமுக அரசுக்கு ஒரு நல்ல அம்சம் தான்.

நீர் இருந்தால்தான் விவசாயம் முறையாக நடந்து விளைச்சல் அதிகமாக இருக்கும். நெல் முப்போகமும் விளையும்.
அந்த வகையில் பார்த்தால், 2020-ல் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் பன்மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. மாநிலத்தில் உணவு தானிய தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 3 அம்சங்களும் ஒரு அரசுக்கு அரசியல் ரீதியாக சாதக நிலையை ஏற்படுத்தி தரும் என்று
பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Chief Minister Edappadi K. Palaniswami Sows With Farmers - किसानों के साथ  खेत में उतरे 'धरती पुत्र' मुख्यमंत्री | Patrika News

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “ஒரு மாநிலத்தில் மின்சாரம், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை, தடையற்ற விவசாயம்-தானிய உற்பத்தி இந்த மூன்றும் ஆளும் கட்சிக்கு 3 முதல் 5 சதவீத வாக்குகளை பெற்றுத் தரக்கூடிய காரணியாக அமையும். தங்களுக்கு இதனால் எவ்வித பிரச்சினையும் இல்லை என்கிறபோது அரசு மீது மக்களுக்கு அதிருப்தி எழ எந்தவிதத்திலும் வாய்ப்பில்லை. அவர்கள் இருக்கிற அரசு தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்றே விரும்புவார்கள்” என்று எதார்த்த நிலையை விளக்கினர்.

இதுபற்றி அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘எம்ஜிஆர் காலத்தில் அவரை கருணாநிதியால் அசைக்க முடியாததற்கு இயற்கை துணையாக இருந்ததும் ஒரு காரணம்.
எம்ஜிஆர் தமிழகத்தை ஆட்சி செய்தபோது குடிநீர் பிரச்சினை மிக மிகக் குறைவு. வறட்சி நிலவும் மாவட்டங்களில் மட்டும் ஆங்காங்கே தட்டுப்பாடு தென்படும். எம்ஜிஆரை வருணபகவான் என்றுமே கைவிட்டதில்லை. அதுபோல அம்மாவின் ஆட்சியிலும் மழை அவருக்கு கை கொடுத்திருக்கிறது.கடந்த 2015-ல் சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டபோதும் கூட அதிமுக ஆட்சியை கைப்பற்றியது.

When Karunanidhi's bid to merge AIADMK and DMK foiled by MGR- The New  Indian Express

அதனால் எடப்பாடியார் ஆட்சியிலும் மழை ராசி கைகொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு தேசிய அளவில் சாதனை படைத்துள்ளது. எனவே நிச்சயமாக அதிமுக 3-வது முறையாக வென்று சாதனை படைக்கும்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

தமிழக மக்களின் மனநிலையும் அதேபோல் இருப்பதால் மழை ராசி அதிமுகவுக்கு கை கொடுக்கும் என்றே தோன்றுகிறது.

Views: - 0

0

0