ராஜமலை நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தீவிரம்..! பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

9 August 2020, 8:05 pm
Landslide_UpdateNews360
Quick Share

மூணாறு: ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் சில நாட்களாக கனமழை கொட்டி வருவதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்பகுதியில் தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 80க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் களமிறங்கினர்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடக்கத்தில் 17 என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மீட்பு பணிகள் தீவிரமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இடிபாடுகளில் சிக்கிய மேலும் 5 பேரின் உடல் கிடைத்துள்ளது. இதன் மூலம் பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

இன்னமும் 36 பேரை தேடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி  இடைவிடாது நடைபெற்று வருகிறது என்று அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 7

0

0