புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக ராஜவேலு தேர்வு : நாளை முறைப்படி பதவியேற்பார் என அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2021, 1:54 pm
Rajavelu - Updatenews360
Quick Share

புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக ராஜவேலு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பரேவை தோத்லில் என்ஆர் காங் – பாஜக கூட்டணி வெற்றி பெற்று கடந்த மே 7ஆம் தேதி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார். இதையடுத்து ஜுன் 16ஆம் தேதி சபாநாயகரும், 27ஆம் தேதி அமைச்சர்களும் பதவியேற்றனர்.

துணை சபாநாயகர் தேர்வு மட்டும் நடைபெறாமல் இருந்த நிலையில், நாளை காலை 15வது சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதே நாளில் துணை சபாநாயகரும் பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவதற்கான மனுவை பகல் 12 மணி வரை சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்ச் ராஜவேலு துணை சபாநாயகர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.

அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்மொழிய, அமைச்சர் தேனி ஜெயக்குமார் வழிமொழிந்தார். ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்வதாக சட்டப்பேரவை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான அறிவிப்பை நாளை முறைப்படி சபாநாயகர் செல்வம் வெளியிடுவார், அதைத்தொடர்ந்து துணை சபாநாயகர் பதவியேற்பு நடக்கும் என்று தெரிவக்கப்பட்டுள்ளது. நாளை சட்டப்பேரவை கூட உள்ளதால், அரசு கொறடா மற்றும் முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் பதவிகளும் ஓரிரு நாளில் நிரப்பப்பட உள்ளன.

Views: - 425

0

0