#இஸ்லாமிய_துரோகி திமுக : ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கும் ரஜினி ரசிகர்கள்..! வைரலோ… வைரல்..!

15 February 2020, 12:49 pm
Rajini stalin updatenews360
Quick Share

சென்னை: #இஸ்லாமிய_துரோகி திமுக என்று ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவம் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. காவல்துறையை கண்டித்ததால் தடியடி என்று போலீசும், போலீஸ் தான் அத்துமீறியதாக இஸ்லாமிய அமைப்புகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள் உள்ளே புகுந்த தேசியம், தமிழகம், போராட்டம் என்று முழங்க ஆரம்பித்துவிட்டனர். வீதிக்கு வாங்க ரஜினி என்று ஒரு க்ரூப் இணையத்தில் ஹேஷ்டேக்கை ஆரம்பித்து ஆட்டத்தை தொடங்கினர்.

அவ்வளவு தான்… உடனடியாக ரஜினி ரசிகர்கள் களத்தில் குதித்து விட்டனர். இஸ்லாமிய துரோகி திமுக என்று ஹேஷ்டேக்கை உருவாக்கி கலக்க ஆரம்பித்து விட்டனர்.

இஸ்லாமிய துரோகி திமுக, கலவரம் தூண்டும் திமுக என்று பின்னி எடுத்து வருகின்றனர். ஸ்டாலின் உண்மையான முகம் தெரிந்துவிட்டது, மத பிரச்சாரத்தை தூண்டிவிடுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

அடித்தது போலீஸ்.. ஆளுவது அதிமுக … ஆனால் ரஜினி வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்று எப்படி திமுக கூறலாம் என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இப்போது போராடியவர்கள் முஸ்லிம்கள் கிடையாது, அவர்கள் ஜிகாதிகள் என்று சிலர் கூறி இருக்கின்றனர். திமுக பக்கம் யாரும் போகவேண்டாம், அவர்கள் மதவாதிகள் என்றும் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

எது, எப்படியோ… திமுகவுக்கு எதிரான பிரச்சாரம் தான் இப்போது உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது என்பது இதன்மூலம் புலனாகிறது.

Leave a Reply