படங்களை ஓட வைக்கவே அரசியல் வசனம் : ரஜினி மீது ரசிகர் மன்ற முன்னாள் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு

12 July 2021, 3:36 pm
rajini - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : படங்களை ஓட வைக்கவே அரசியலுக்கு வருவேன் எனக் கூறி ரசிகர்களையும், மக்களையும் நடிகர் ரஜினிகாந்த் ஏமாற்றிவிட்டதாக குமரி ரஜினி நற்பணி மன்ற முன்னாள் மாவட்டச் செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மற்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என அறிவித்திருந்தார். அதேபோல் வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை என்றும் கூறியுள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த அறிவிப்புக்கு எதிராக குமரி ரஜினி ரசிகர் நற்பணி மன்ற முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது;- ரஜினிகாந்த் இன்று ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து ரஜினி நற்பணி மன்றத்துடன் இணைத்துள்ளார். இது தமிழக மக்களையும் ரஜினி ரசிகர்களையும் ஏமாற்றும் வேலை. ஏனென்றால் நாங்கள் 40 ஆண்டு காலமாக அந்த நற்பணி மன்றம் என்ற பெயரில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி ரஜினிகாந்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள்.

ஆனால் ரஜினிகாந்த் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நான் அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்று சொன்னார்கள். இதை நம்பி அவருடைய ரசிகர்கள் பல லட்ச ரூபாய்களை தங்களது சொந்த காசுகளையும், கடன் வாங்கியும் செலவு செய்து பல லட்ச ரூபாய்களை இழந்தனர்.2017-க்கு முன்பு ரஜிகாந்த் சினிமாவில் மார்க்கெட்டை இழந்திருந்திருந்தார்.

அந்த கால கட்டத்தில் 2.0, காலா, கபாலி, பேட்டை போன்ற படங்களை ஓட வைக்கவே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி, குறுகிய எண்ணத்துடன் அவர் தங்களது ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றிவிட்டார். தற்போது அண்ணாத்த படம் முடியும் தருவாயில் உள்ளது. அவர் இன்னும் படங்கள் நடிப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இதனால், இப்போது அவர் மீண்டும் மக்கள் மன்றம் நற்பணி மன்றமாக செயல்படும் என்று கூறுகிறார்.

இது மிகப் பெரிய மோசடியும், நம்பிக்கை துரோகமுமாக விளங்குகிறது. எனவே, ரஜினி ரசிகர்கள் யாரும் ரஜினிகாந்தை நம்பி ஏமாற போறதில்லை. ரசிகர் மன்றமும் வேண்டாம் என்று சொன்னால் எங்களுக்கு விமோசனம். ஏனென்றால் 40 ஆண்டுகளாக ரசிகராக இருந்த பலர் இன்று உயிரோடு இல்லை. மேலும் பல வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரசிகர்கள் குத்துயிரும் குலை உயிருமாக உள்ளனர்.

மீண்டும் இது போன்ற ரசிகர்கள் கடன் வாங்கி செலவு செய்வது ராஜியின் படங்கள் ஓடுவதற்காக மட்டுமே தவிற வேறு ஒன்றுமில்லை. எனவே, அவர் ரஜினி ரசிகர் மன்றத்தையும் கலைக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 162

0

0