‘உனக்கு ஒன்னு ஆகாது கண்ணா.. தைரியமா இருங்க’ : ரசிகருக்காக ரஜினி வெளியிட்ட உருக்கமான ஆடியோ..!

17 September 2020, 1:39 pm
rajini audio- updatenews360
Quick Share

சென்னை : மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரசிகர் ஒருவருக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரஜினி ரசிகரான முரளி என்பவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தான் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அந்த நபர், நடிகர் ரஜினிகாந்திற்கு சில பதிவுகளை உருக்கமாக போட்டிருந்தார்.

அவர் விடுத்திருந்த பதிவில் கூறியிருப்பதாவது :- தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும், தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலையை உருவாக்கி கொடு. உன்னை அரிணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறனே என்ற ஒரு வருத்தம், எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைக் கண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவர் விரைந்து குணமடைய வேண்டுவதாகக் கூறி உருக்கமான ஆடியோ ஒன்றை போட்டுள்ளார்.

அந்த ஆடியோவில், “முரளி, நான் ரஜினிகாந்த் பேசுற. உனக்கு ஒன்னு ஆகாது கண்ணா.. தைரியமா இருங்க. நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து வீட்டுக்கு வந்துடுவீங்க. குணமடைந்து வந்த பிறகு, ப்ளீஸ்… குடும்பத்துடன் வீட்டிற்கு வாங்க. நான் உங்கள பாக்கற, தைரியமா இருங்க, நான் ஆண்டவன வேண்டிக்கிறேன். தைரியமா இருங்க… தைரியமா இருங்க… வாழ்க வளமுடன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 11

0

0