12ம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி : பரபரப்பில் தமிழகம்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

10 July 2021, 7:34 pm
rajini - updatenews360
Quick Share

சென்னை ; மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் வரும் 12ம் தேதி சந்தித்து பேசுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அவரே முன்னர் அறிவித்திருந்தார். மேலும் தனது கட்சியின் பெயர் பற்றி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முறையாக அறிவிப்பதாக தெரிவித்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த அவர் உடனே பெங்களூரு அப்பேல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை பெற்ற அவருக்கு மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் வீட்டில் ஓய்வு எடுத்தார். அதன் பின்னர் தனது அரசியல் நிலைப்பாட்டை வாபஸ் பெறுவதாகவும், என்னை மன்னித்துவிடுங்கள் என அறிக்கை வெளியிட்டார். ஆனால் ரஜினி ரசிகர்கள் தனது தலைவர் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் அவரது ரசிகர்கள் சிலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்தனர். இதை வரவேற்ற ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தமது ரசிகர்கள் யார் வேண்டுமானாலும் எந்த கட்சியிலும் இணையலாம் என குறிப்பிட்டிருந்தார்.

அரசியலுக்கு முழுக்கு போட்ட பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே ரஜினி கவனம் செலுத்தி வந்தார். இதைத் தொடர்ந்து, வெளிநாட்டுக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், மக்கள் மன்ற நிர்வாகிகளை ஜுலை 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாவட்ட செயலாளர்கள் மட்டும் சென்னைக்கு வருமாறு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கு பிறகு மீண்டும் அரசியலுக்கு வருவது பற்றி ஏதேனும் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுவாரா..? என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதேவேளையில், அரசியல் கட்சியினரின் பார்வையும் ரஜினிகாந்தின் ஆலோசனைக் கூட்டத்தை எதிர்பார்த்தே உள்ளன.

Views: - 100

0

0