கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பேரறிவாளன் : திருப்பத்தூர் ஆட்சியர் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

25 June 2021, 3:05 pm
perarivalan vaccine - updatenews360
Quick Share

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 6 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான பேரறிவாளன் உடல்நலத்தை காரணம் காட்டி ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ளார். அவரது வீட்டில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமும் காலை 10 மணிக்கு ஜோலார்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தடுப்பூசி முகாமில், போலீஸ் பாதுகாப்புடன் வந்த பேரறிவாளன் தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின்னர், மீண்டும் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பினார்.

Views: - 422

0

0