மாநிலங்களவை தேர்தல் : முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு

Author: Babu Lakshmanan
21 September 2021, 10:25 am
AnnaArivalayam
Quick Share

சென்னை : மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் அக்.,4ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் இருவரும் இன்று பிற்பகல் 12 மணி அளவில் சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். இரண்டு காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதம் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026, ஏப்ரல் மாதம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 164

0

0