மாநிலங்களவை துணைத்தலைவராக ஹரிவன்ஷ் மீண்டும் தேர்வு..!

14 September 2020, 7:35 pm
harvansh - updatenews360
Quick Share

டெல்லி : மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பலத்த மருத்துவ பாதுகாப்புடன் இன்று தொடங்கியது. அக்.,1ம் தேதி வரை விடுமுறையின்றி அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்நாளில் மாநிலங்களவை துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில், தேசிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

இவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் எம்.பி. மனோஜ் ஜாவை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில், முதல் நாள் கூட்டத்தொடரில் ஹரிவன்ஷ் நாராயண்சிங் மீண்டும் மாநிலங்களவை துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே, இந்தப் பதவியை வகித்து வந்த இவர், மீண்டும் அதே பதவிக்கு அவர் தேர்வாகியுள்ளார்.
மாநிலங்களவை துணை தலைவராக தேர்வாகியள்ள ஹிரிவன்ஷ் நாராயண்சிங்கிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.