‘அமர்க்களப்படுத்துறீங்க போங்க’ : முதலமைச்சர் பழனிசாமியின் செயலை பாராட்டிய ராமதாஸ்…!!!

23 February 2021, 11:07 am
ramadoss updatenews360
Quick Share

சென்னை: தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,000 லிருந்து ரூ.6,250 ஆக உயர்த்தப்படுகிறது. ஓராண்டு பணி நிறைவு செய்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.8,600 – ரூ.29,000 வரை வழங்கப்படும். மேலும், கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.4,250 லிருந்து ரூ.5,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓராண்டு பணி முடித்த கட்டுனர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.7,800 – ரூ.26,000 வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரேசன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், “நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்களுக்கும், கட்டுனர்களுக்கும் ரூ.1250 ஊதிய உயர்வை தமிழக அரசு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்த ஓராண்டுக்குப் பிறகு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டத்தக்கது!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 9

0

0