மூடு… மூடு… மதுக்கடைகளை மூடு : காப்பாற்று… காப்பாற்று… மக்களைக் காப்பாற்று : ராமதாஸ் வலியுறுத்தல்

6 May 2021, 1:03 pm
ramadoss updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மதுக்கடைகளை மூட வேண்டும என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் 170ஐ நெருங்கியுள்ளது. இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், ” திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று காலை அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த உயிரிழப்புகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்

தமிழ்நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. மிகவும் நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசு கூடுதல் வேகத்தில் செயல்பட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களைக் காப்பாற்ற முழு ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் உடனடியாக முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5000 வழங்க வேண்டும்

மூடு… மூடு… மூடு… தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடு. காப்பாற்று….. காப்பாற்று….. காப்பாற்று….. கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்று!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 135

0

0