ஸ்டாலின் அரசின் அடுத்த சிக்ஸர்! முதல் நாள் ரூ.165 கோடி… 2வது நாளில் ரூ.127 கோடி… டாஸ்மாக் திறப்பு குறித்து ராமதாஸ் கடும் விமர்சனம்..!!

17 June 2021, 8:50 pm
cm stalin - tasmac - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா சூழலிலும் டாஸ்மாக் கடைகளை திறந்த முதலமைச்சர் ஸ்டாலினை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு கடந்த மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. தற்போது, தொற்று பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் 21ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தொற்று பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் கடந்த 14ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளை திறக்க பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போலி மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

ஆனால், மதுக்கடைகளை திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் அவர் இன்று விடுத்துள்ள முகநூல் பதிவில்வ கூறியிருப்பதாவது :- மதுவின் தீமை – அன்று பெருந்தலைவர்கள் சொன்னதும், செய்ததும்! பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின் 4 மாவட்டங்களில் 1937 – 38ஆம் ஆண்டில் மதுவிலக்கை நடைமுறைபடுத்தியவர் ராஜாஜி. 1971ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்வதென கலைஞர் முடிவு செய்ததை அறிந்த ராஜாஜி அவர்கள், 1971 ஜூலை 20 செவ்வாய்க்கிழமை மாலை கொட்டும் மழையில் கையில் ஒரு குடையை எடுத்துக் கொண்டு கருணாநிதி இல்லத்துக்குச் சென்றார்.

அப்போது, மதுவிலக்கை ரத்து செய்வது எதிர்கால சந்ததியினரை வெகுவாக பாதிக்கும் என கருணாநிதியிடம் மன்றாடினார். ஆனால் அதையும் மீறி தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு சாராயக் கடைகள் திறக்கப்பட்டன. இன்று நடப்பது!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் சூழலில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை முதல் நாள் மது விற்பனை ரூ.165 கோடியைத் தாண்டியுள்ளது. இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமை மதுவிற்பனை ரூ. 127 கோடியை தாண்டிவிட்டது. இது தான் தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சிக்ஸர் ஆகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 283

0

0