அமைச்சரின் விஞ்ஞானம்…. சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? மின்தடை குறித்த விளக்கத்திற்கு ராமதாஸ் பாய்ச்சல்

22 June 2021, 3:15 pm
senthil balaji - ramadoss - updatenews360
Quick Share

சென்னை : அணில்கள் மின்கம்பியில் ஓடுவதால்தான் மின்தடை ஏற்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்தால் மின்வெட்டு மீண்டும் தலைதூக்கும் என சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுக பிரச்சாரம் செய்து வந்தது. அதன்படியே, திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழலில் ஏற்படும் மின்தடையினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாதத்திலேயே அரசின் மீது மக்களுக்கு சற்று அதிருப்தி ஏற்பட்டது.

இதனிடையே, ஊரடங்கு முடியும் வரையில் மின்வெட்டு ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகி விட்டது. பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலராஜி கூறியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. அதாவது, மின்கம்பிகளில் அணில்கள் செல்வதால், உரசல் ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதாக தெரிவித்தார்.

அமைச்சரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் புதைவழி மின்இணைப்பு திட்டம் இருக்கையில், அணில்கள் பூமிக்கு அடியில் செல்கிறதா..? என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி – விஞ்ஞானம்…. விஞ்ஞானம்!

சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?, என தெரிவித்துள்ளார்.

Views: - 198

0

0