3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவிப்பு

Author: Babu Lakshmanan
14 October 2021, 11:00 am
ration shop - updatenews360
Quick Share

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி அத்தியாவசிய பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, ஏழை, எளிய மக்களும் ரேஷன் பொருட்களை பெற்று பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் நோக்கில், முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையில் ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி அத்தியாவசிய பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ 11.10.2021 அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில்‌ மாண்புமிகு உணவுத்‌ துறை அமைச்சர்‌ அவ்களால்‌ வழங்கப்பட்ட அநிவரைகளின்‌ படி தீபாவளி-2021 பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும்‌ பயன்பேறும்‌ வகையில்‌ நவம்பர்‌-2021 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ அதிகபட்சமாக முன்நர்வு முழுமையாக முடிக்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டது.

மேலும்‌ 01.11.2021, 02.11.2021 மற்றும்‌ 03.11.2021 ஆகிய தினங்களில்‌ நியாயலிலைக்‌ கடைகள்‌ காலை 8 மணி முதல்‌ மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உணவு மற்றம்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி சிறப்பு அத்தியாவசியப்‌ போருட்கள்‌ நவம்பர்‌ மாதத்திற்கான அதிகபட்சமாக முன்நகர்கினை முழுமையாக முடிக்கப்பட வேண்டும்‌ எனவும்‌, மேலும்‌ 1.11.2021, 02.11.2021 மற்றும்‌ 03,11.2021 ஆதிய தினங்களில்‌ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாயவிலை கடைகள்‌ காலை 8 மணி ருதல்‌ மாலை 7 மணி, வரை திறந்து குடும்ப ‌அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்‌ வழங்கப்படுவதை‌ உறுதிசெய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 124

0

0

Leave a Reply