செந்தில் பாலாஜியை அன்று ராவணன் என்று கூறிய ஸ்டாலின் இன்றைக்கு ராமனாக நினைக்கிறார் என ஆர்பி உதயகுமார் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி.உதயகுமார் கேள்வி
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், சோழவந்தான் தொகுதி மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் அதிமுக வளர்ச்சி பணி குறித்தும் ,மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் சிக்கந்தர் சாவடியில்நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை ஒன்றிய செயளாலர் அரியூர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி.உதயகுமார், கழக மகளரணி இணைச்செயளாலர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
ஆர் பி.உதயகுமார் பேசியதாவது, எதிர்க்கட்சியாக இருந்தபோது கனிமொழி தமிழ்நாட்டில் விதவைகள் அதிகரித்துவிட்டன என்று கூறினார். தற்போது ஸ்டாலின் ஆட்சியில் விதவைகள் அதிகரித்தது மட்டுமல்லாது, மதுவினால் கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவற்றை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இதை தடுத்து நிறுத்த முடியவில்லை, முதலமைச்சர் உண்மையான உத்தரவு போடுகிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதையெல்லாம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இதே செந்தில் பாலாஜியை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் பத்து தலை ராவணன் என்றும், அவரது தம்பியை அசோகன், கும்பகர்ணன் இருவரும் அரக்கர்கள் என்றும் கூறினார் ஆனால் இன்றைக்கு தியாகிகள் என்று கூறுகிறார்.
அன்றைக்கு ராவணனாக தெரிந்தவர் இன்றைக்கு ராமனாக தெரிகிறாரா?அதிமுகவில் உள்ள ரெண்டு கோடி தொண்டர்களும் ராமனாக இருந்து எடப்பாடியாருக்கு பாட்டாபிஷேகம் சூட்டுவார்கள்.
செந்தில் பாலாஜி எதற்காக உள்ளே சென்றார் என்று அனைவருக்கும் தெரியும்,திமுகவில் மிசா போன்ற சட்டங்களில் பாடுபட்டும், ஸ்டாலினுக்காக உயிரை கொடுக்க நினைத்தவர்களை ஸ்டாலின் பார்த்ததுண்டா? அதேபோல் திமுக மூத்த தலைவர்களான வேலு, நேரு, பெரியசாமிக்கு இல்லாத மரியாதையை தற்போது செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
போதை பொருள் நடமாட்டத்தின் நெட்வொர்காக தமிழகம் உள்ளதாக கூறப்படுகிறது .தற்போது கூட போதை பொருள் பிடிபட்டுள்ளது சிறையில் இருக்கும் திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் மூலம் செய்யப்பட்டதாக தகவல் கூறி வருகிறார்கள்.
ஸ்டாலின் வெளிநாடு சென்றார் இது குறித்து எடப்பாடியார் வெள்ளை அறிக்கை கேட்டார் ஆனால் அது குறித்து ஏதும் வெளியிடப்படவில்லை இதை தொடர்ந்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க திமுக அரசை கண்டித்து கழக அம்மா பேரவையின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் வருகின்ற ஒன்பதாம் தேதி மதுரை பழங்காநத்தில் நடைபெறுகிறது.
தற்போது முதலமைச்சர் டெல்லி சென்று மூன்று கோரிக்கையை வைத்ததாக கூறுகிறார் இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக உள்ளது அதன் பயன் பிரதமர் கையில் தான் உள்ளது என்று கூறுகிறார்.
மேலும் படிக்க: ஐஸ்கிரீம் வண்டியால் பறிபோன உயிர்.. மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து உயிரிழந்த பெண்!
என்ன கோரிக்கை கல்வி நிதி, ஜிஎஸ்டி நிதி மெட்ரோ ரயில் நிதி ஆகியவற்றை சொல்லி வலியுறுத்தினாரா இல்லை தனது மகன் உதயநிதியை துணை முதல்வராக்க சென்றாரா? செந்தில்பாலாஜி வழக்குகாக சென்றாரா?
தற்பொழுது கூட உதயநிதியை துணை முதலமைச்சராக ஏமாற்றம் இருக்காது மாற்றம் வரும் என்று கூறுகிறார் இது யாரை ஏமாற்ற என்று தெரியவில்லை .தமிழக மக்களின் மூன்று கோரிக்கையாக சென்றதாக கூறுகிறார் தமிழக மக்களுக்காகவா? இல்லை உதயநிதி துணை முதலமைச்சராக்க நேரம் கேட்கவா? இதற்குரிய விளக்கத்தை இன்னும் சொல்லவில்லை.
இன்றைக்கு திமுக கூட்டணி கட்சிகள் மீது ஸ்டாலின்அச்சம் கொண்ட காரணத்தால், ஏற்கனவே திமுக பவள விழா நடைபெற்றது தற்போது மீண்டும் பவள விழாவை நடத்துகிறார்.
கூட்டணி கட்சிக்காகத்தான் இந்த பவள விழாவை மீண்டும் நடத்துகிறார் .திருமாவளவன் தெளிவான கருத்து சொல்லிவிட்டார் ஆகவே மக்கள் உரிமைகள், மக்களுக்காக உழைக்க கூடிய கட்சிகள் எல்லாம் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அணிவகுக்க வேண்டும் என்று கூறினார்.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.